புத்தக விமர்சனம் : நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன் | அம்பேத்கர் | தாயப்பன் அழகிரிசாமி |MyChronicles007

புத்தகம் : நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்
எழுத்தாளர்: பி.ஆர்.அம்பேத்கர்
தமிழில் : தாயப்பன் அழகிரிசாமி
வெளியீடு: தலித் முரசு வெளியீடு

                                                                விமர்சனம்

 

” கெடுவாய்ப்பாக நான் ஒரு தீண்டத்தகாத இந்துவாக பிறந்துவிட்டேன் . அதை தடுப்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது . ஆனால் அருவருக்கத்தக்க இழிவான நிலையில் வாழ்வதை என்னால் தடுத்துக் கொள்ள முடியும் . எனவே நான் உறுதியாகக் கூறுகிறேன் : நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்”

                          என்கிற அம்பேத்கரின் கூற்றை புத்தக முகப்பில் வைத்து இந்த பதிப்பின் மொத்த சாராம்சத்தையும் சொல்லி விடுகிறார். இதுவே இந்த கட்டுரைத் தொகுப்பின் மையக் கருத்தை நமக்கு உணர்த்தி விடும்.
மொத்தம் 175 பக்கங்களில், இந்து மதத்திலிருந்து வெளியேறி பவுத்த மதத்தை தழுவக்கூறி அம்பேத்கர் ஆற்றிய பத்து மேடை உரைகளின் தொகுப்பே இந்தப் புத்தகம்.

Before everything, we would like to announce that we have launched our new website – ThyStones – Life is beyond our scope of imagination. Do you have questions that you want to find answers? Do you want to read cool stuff that excite you and transform your life ? Then, head on to ThyStones.com

இந்த பதிப்பை மூன்று பாகங்களாக பிரித்து பார்க்க இயலும்:

1.     முதலாவதாக தான் ஏன் இந்து மதத்தை விட்டு வெளியேற வேண்டியது அவசியம் என்று கூறுகிறேன் என்கிற அம்பேத்கரின் கருத்துகள் முன்வைக்கப் படும் உரைகள் .
              இந்த உரைகள் இந்துத்துவத்தினாலும் சதுர்வர்ணத்தினாலும் சிறுபான்மை சமூகத்தினர் மற்றும் தலித்து சமூகத்தினர் அனுபவித்த அவலம் நிறைந்த வாழ்க்கை முறையையும் அவர்களுக்கு மறுக்கப் பட்ட இன்ன பிற உரிமைகளை பற்றியும் நமக்கு தெரியப்படுத்தும்.
2.      இந்து மதத்தை விட்டு வெளியேறாமல் போனால் தலித் சமூகத்தினர் சாதி இந்துக்களால் எவ்வாறான தாக்குதல்களுக்கு உள்ளாவர் என்றும் எவ்வாறாக ஒடுக்கப் படுவர் என்றும் உணர்த்தும்.
3.       ஏன் பவுத்த மதத்தை தழுவ வேண்டும் என்றும் இந்து மதத்தை விட்டு வெளியேறிய பின் தன் மக்கள் எவ்வாறாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அம்பேத்கர் தன் உரைகள் மூலம் அறிவுறுத்தியிருப்பார்.

        இயோலா உரை, கல்யாண் உரை, தாதர் உரை, பாந்த்ரா உரை, நாகபூர் உரை என்று அம்பேத்கர் ஆற்றிய உரைகளின் தொகுப்பே இந்நூல்.
இந்து மதத்தை கை விடுதல் ஏன் அவசியம் என்றும், ஏன் பவுத்தம் வேண்டும் என்றும், நாம் எவ்வாறான வாழ்க்கை வாழ வேண்டும் என்பது பற்றியும் சதுர்வர்ணம் எவ்வாறாக நம்மை அடிமை படுத்துகிறது என்றும் அம்பேத்கர் தன் உரைகள் மூலம் தன் மக்களுக்கு மட்டுமல்லாது அனைவர்க்கும் பொதுவில் அறைகூவல் செய்கிறார். அம்பேத்கர் என்னும் ஆளுமையை பற்றியதான ஆரம்பக் கட்ட புரிதல் வேண்டுமாயின் நீங்கள் அவசியம் முதலில் படிக்க வேண்டிய புத்தகம் இதுவாகும்.
              சதுர்வர்ணத்திற்கு ஆதரவான கருத்தை காந்தி கொண்டிருப்பதையும் அம்பேத்கர் இங்கே கேள்வி எழுப்புகிறார். சதுர்வர்ணத்தை எவ்வாறாக சாதி இந்துக்கள் தூக்கி பிடித்து தாழ்ந்த சாதி மக்களை ஒடுக்கினர் (இன்றும் கூட ) என்பதை அம்பேத்கர் ஆழமாக அலசியிருப்பார்

தமிழாக்கத்தில் தாயப்பன் அழகிரிசாமி அவர்கள் பிழை இழைத்ததாக தெரியவில்லை. இந்த பதிப்பின் குறை எனப்பட்டது இதன் குறைவான பக்கங்களே. தமிழில் இது போன்றதொரு பொக்கிஷம் அரிதே. அம்பேத்கரின் உரைகளின் தமிழாக்கமே இதுவென்பதால் உள்ளது உள்ளபடி கூறப்பட்டுள்ளது.இதில் தாயப்பனின் தனிப்பட்ட கருத்துக்கு இடமில்லை.
இறுதியாக நம்மை சிந்தனை வயப்படுத்தி நம் சமூகத்தின் இருட்டு பக்கங்களுக்குள் நம்மை அழைத்துச்செல்லும் இந்நூல் நிச்சயம் ஒரு நல்ல வாசிப்பு அனுபவத்தையும் தரும்.

–  லெஸ்லி (Lesley).

Please do read my previous review on Who Will Cry When You Die- Robin Sharma.

3 thoughts on “புத்தக விமர்சனம் : நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன் | அம்பேத்கர் | தாயப்பன் அழகிரிசாமி |MyChronicles007

Add yours

Leave a comment

A WordPress.com Website.

Up ↑